செய்திகள்

அகதிகள் விவகாரம்: யூ.எச்.எச்.சி.ஆர். பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சு

அகதிகள் விவகாரங்களுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலய (UNHCR) உயர் அதிகாரிகள் குழு ஒன்று அகதிகள், மற்றும் தஞ்சம் கோருவோர் விவககாரங்கள் தொடர்பாக இலங்கையில் முக்கிய பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது.

UNHCR ஆசிய பசிபிக் பிராந்திய பணிப்பாளர் ஜொசெபா ஒஜனோ தலைமையிலான இந்தக் குழுவினர் கொழும்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக இடம்பெற்ற இந்தப்பேச்சுக்கள் சுமூகமாக இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. அகதிகளின் மீள்குடியேற்றம், வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கையர்கள் விவகாரம் தொடர்பாக இருதரப்பினரும் முக்கியமாகப் பேசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.