செய்திகள்

அகதி முகாமில் உருவான கிரிக்கெட் அணி

கிரிக்கெட் உலகின் மகிழ்ச்சியான கதையிது. மேற்கிந்திய அணிக்கு என்ன நடைபெறுகின்றது என்பதற்கு எதிர்மாறான கதையிது.

Afgan 3இருபது வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் என்பது இருக்கவில்லை.  எனினும் புதன்கிழமை அவர்கள் பங்காளதேஷத்தை உலககிண்ணபோட்டியில் எதிர்கொள்கின்றனர். பலவீனமான நிலையிலுள்ள டெஸ்ட் அணியை அவர்கள் தோற்கடிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இறுதியாக இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியிலும் ஆப்கானிஸ்தானே வெற்றிபெற்றது.

உற்சாகத்துடன் கூடிய வெற்றிக்கான தாகமே அவர்களது வளர்ச்சிக்கான காரணமாக இதுவரை அமைந்துள்ளது. கிரிக்கெட்டே இல்லாத சூழ்நிலையிலிருந்து அவர்கள் பயணம்செய்துள்ளனர், வேறு எந்த அணியும் எதிர்கொள்ளாத தடைகளை அவர்கள் சந்தித்துள்ளனர். யுத்தத்தால் ஓரு முழுத்தலைமுறையும் இழந்த போதிலும் சரியான மனோநிலையே அவர்களின் இந்த வளர்ச்சிக்கு காரணம்.

அவர்கள் இதுவரை சொந்த மண்ணில் விளையாடியதில்லை விளையாடப்போவதுமில்லை , சொந்த மண்ணிண் சாதகமான சூழல் இல்லாமலே அவர்கள் அயர்லாந், சிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற அணிகளுக்கு சவாலாக விளங்கியுள்ளனர்.

WCup Afghanistan Debut

ஏனைய கிரிக்கெட் அணிகளிடம் அதிநவீன வசதிகளுடன் கூடிய பாரிய தைமானங்கள் உள்ளன. ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் பெசாவருக்கு வெளியேயுள்ள கச்சா கரி அகதிமுகாமிலேயே பிறந்தது.பணவசதி உட்பட எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, எனினும் அவர்களிடம் உற்சாகத்துடன் கூடிய வெற்றிக்கான தாகம் காணப்பட்டது. அதேவேளை அதற்கு சாதகமான சில விடயங்களும் காணப்பட்டன.1980 களில் பெசாவரில் கிரிக்கெட் காணப்பட்டது.தலைசிறந்த கிரிக்கெட் கழகங்கள் காணப்பட்டன.அகதி முகாம்களில் பிறந்த பலர் அவற்றில் சேர்க்கப்பட்டனர்.

இரண்டாவது சிறுவயதில் கற்களையும், தடிகளையும் வைத்து விளையாடும் பழக்கமொன்று ஆப்கானிஸ்தானில் காணப்படுகின்றது. அனைத்து யுத்தங்களின் மத்தியிலும் அவர்கள் தங்களது உடற்பலத்தை இழக்காமலிருந்தனர்.
டெனிஸ் பநதும் அதனை மிகதொலைவிற்கு அடிப்பதற்கான வலுவும் போதுமானவை என்பதை மேற்கிந்திய தீவுகளும், பாக்கிஸ்தானும் நீருபித்தன. ஆப்கானிஸ்தான் விடயத்திலும் இதவே இடம்பெற்றது.

அனைத்து மத பிரிவினருக்கும் கிரிக்கெட் மகிழ்ச்சியை அமைதியை அளிக்கின்றது என அணியின்; தலைவர் முகமது நபி தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் கிரிக்கெட்: காயம்பட்ட புலி என்ற புத்தகத்தில் தலிபான் கிரிக்கெட் விளையாடுவதற்காக எப்படி ஆப்கானிஸ்தான் இராணுவம் மைதானத்தை சுத்தம்செய்தது என்பதை பீட்டர் ஓபேர்ன் வர்ணித்துள்ளார்.
ஆப்கான் அணியின் பலம மிகவேகமாக பந்து வீசக்கூடிய அதன் ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Afgan 2ஹமீட் ஹசன் மிகவேகமாக பந்துவீச கூடியவர் 90 மைல்வேகத்தில் வீசுவார், ரிவேர்ஸ்ஸவிங் செய்யக்கூடியவர்.
அவர்களின் அடுத்த பலம் அடித்து ஆடக்கூடியவர்கள். சர்வதேச போட்டிகளில் தான் எதிர்கொண்ட முதல்பந்தை சிக்ஸர் அடித்த ஓரேயொரு வீரர் அவர்களது நபி மாத்திரமே.

2015 உலககிண்ண போட்டிகளில் அவர்கள் முதல்சுற்றுடன் வெளியேறலாம்,ஆனால் உலகின் கவனம் அத்துடன் நின்றுவிடக்கூடாது,அவர்களால் உள்நாட்டில் போட்டிகளை நடத்த முடியாததால் ஏனைய அணிகள் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது அவசியம்.