செய்திகள்

அகுரண மற்றும் புத்தளத்தில் 2 கிராமங்கள் மூடப்பட்டது

புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதால் புத்தளத்திலும் மற்றும் கண்டியிலும் இரண்டு பிரதேசங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
புத்தளத்தில் கடயன்குளம் கிராமமும் , கண்டியில் அகுறனவும் இவ்வாறாக மூடப்பட்டுள்ளது.
இந்த பிரதேசங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்புகளை பேணியளவர்களால் கொரோனா மேலும் பரவும் அபாயம் காணப்படுவதால் அவர்களை அடையாளம் காணும் வகையில் தற்போது அந்த பிரதேசங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இதன்படி அந்த கிராமங்களுக்குள் வெளியார் செல்லவோ , அங்கிருந்து வெளியில் வருவதற்கோ முடியாத வகையில் கிராமங்களை மூடுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. -(3)