அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்ட பாதை புனரமைக்கப்படுமா ?
மக்களின் தேவைக்கேற்ப பாதை புணரமைக்கப்படவில்லையென அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பாதை மன்றாசி நகரத்திலிருந்து சுமார் 06 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாகும். இப்பாதையின் ஊடாக அல்பியன் ஆட்லோ தோன்பீல்ட் மற்றும் சென்மார்கட் ஆகிய தோட்டத்துக்கு செல்லும் இப்பாதை பல வருடகாலமாக புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்பட்டது.
இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு இத்தோட்ட பகுதியில் இருந்து பாடசாலை மாணவர்கள் பசுமலை அக்கரப்பத்தனை ஆட்லோ போன்ற பாடசாலைகளுக்கு நடந்து செல்கின்றனர்.பாதையை புணரமைப்பு செய்து தரும்படி இப்பிரதேச மக்கள் மலையக அரசியல் வாதிகளிடம் பல முறை கோரிக்கைகளை முன்வைத்தனர். அதன் பின் பல வருடங்களுக்கு பின்பு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அமைச்சர் ஓருவரின் நிதியின் மூலம் இப்பாதை கொங்கீரிட் பாதையாக செப்பணியிடப்பட்டது. இப்பணி மன்றாசி தோட்ட பகுதியில் இருந்து ஒரு குழுவும் ஆட்லோ தோட்ட பகுதியில் இருந்து ஒரு குழுவும் புணரமைப்பு பணியை மேற்கொண்டனர். பாதை புணரமைக்கப்பட்ட போதிலும் மிக முக்கியமான பிரதேசம் செப்பணியிடாமல் கைவிடப்பட்டது.
இப்பகுதி தற்போது மிகவும் மோசமான நிலையில் மக்கள் நடக்கமுடியாத நிலையில் காணப்படுகின்றது. அத்தோடு மழைக்காலங்களில் குழிகளில் மழைநீர் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்களும் வாகனசாரதிகள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளும் பல இடர்களை சந்திக்கின்றனர். கைவிடப்பட்ட பகுதியை செய்து தரும்படி தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வந்தவர்களிடம் இம்மக்கள் தங்களின் குறைப்பாடுகளை கூறிய போது தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக செய்து தருவதாக கூறிசென்ற பலர் இப்பகுதி மறந்துவிட்டார்கள் என மக்கள் புலம்புகின்றனர்.
இப்பாதை தொடர்பாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்
திரு.மேவின்
இப்பாதை மிகவும் மோசமான நிலையில உள்ளது. தற்போது நடக்கமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. பாதை எது குழி எது என்று தெரியவில்லை இப்பாதை தொடர்பாக அரசியல் வாதிகளிடம் கேட்டோம் ஒன்றும் நடக்கவில்லை தற்போது இது பாதையல்ல பெரிய குழமாக தான் உள்ளது இரவு நேரத்தில் நகரத்துக்கு சென்று வரும் போது பாரிய பிரச்சனையாக உள்ளது சில சமயம் பலர் விழுந்து காயப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது.எப்போது இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமோ என்ற ஏக்கத்தில் இருப்பதாக இவர் தெரிவித்தார்.
திருமதி வள்ளியம்மா.
எனக்கு விவரம் தெரிந்த காலம் தொட்டு இப்பாதை இதே கெதிதான் மழைவந்தால் ஆற்று நீர் பாதையில் தான் பெறுக்கெடுக்கும் பாதை செய்வதாக சொன்னார்கள் வேலையும் ஆரம்பித்தார்கள் உறுப்படியாக செய்யாமல் இரண்டு பக்கம் செய்து விட்டு நடுவில் மாத்திரம் எதுவும் செய்யாமல் விட்டதுக்கு காரணம் என்னவோ என்று புரியவில்லை வாக்கு கேட்டார்கள் அதுவும் கொடுத்தோம் சந்தா பணம் கேட்டார்கள் அதுவும் மாதம் தவறாமல் கொடுத்துவருகின்றோம் எங்களுக்கு தேவையான விடயங்களை செய்து தர எவறும் முன்வருவதில்லை எனவே இப்பாதையை உடனடியாக செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.
திரு சண்முகராஜ்
நாங்கள் இப்பாதையின் ஊடாக தான் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு தோட்ட லொறிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் நோயாளர்களை ஏற்றிசெல்லுகின்றனர் இதன் காரனமாக நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர் இப்பாதையை புணரமைத்து தருவதாக கூரி எங்களை ஏமாற்றி வருகின்றார்கள் இப்பாதையின் ஊடாக அரசியல் வாதிகள் அடிக்கடி செல்கின்றார்கள் இப்பாதையின் நிலைப்பற்றி தெரியாத விடயமல்ல தெரிந்தும் தெரியாதமாதிரி இருப்பது தான் வேதனை குறிய விடயம் எனவே இனியும் எங்களை ஏமாற்றாமல் தயவுசெய்து இப்பாதையை உடனடியாக புணரமைக்கப்படவேண்டும் .
மலையக அரசியல் வாதிகள் மக்களுக்காக செய்யப்படும் அபிவிருத்தி பணிகள் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியதை இப்பாதை அரசியல் வாதிகளுக்கு உணர்த்துகின்றது.