செய்திகள்

அசிட் தாக்குதலுக்கு இலக்காகி 17 பேர் வைத்தியசாலையில்

அத்தனகல பகுதியில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகிய 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் , சிங்கள புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட எல்லே விளையாட்டு போட்டியின் போது இரு குழுக்கக்கிடையே வாய்த்தர்க்கம் முற்றியதை தொடர்ந்து ஏற்பட்ட மோதலையடுத்தே அங்கு அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது மோதலை தடுக்கச் சென்ற பிரதேசவாசிகள் உட்பட 17 பேர் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.