செய்திகள்

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக மிரட்டப் போகும் கபீர் சிங்

அஜித் மீண்டும் ‘வீரம்’ படத்தை இயக்கிய இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக முடிவாகி உள்ளது. படத்தின் இசை அனிருத். இதனை அவரே தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இந்நிலையில் லேட்டஸ்ட்டாக படத்தில் வில்லனாக நடிப்பவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 56வது படத்துக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் கபீர் சிங்கை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளார்களாம். கபீர் சிங் தெலுங்கில் ஜில் படத்தில் வில்லனாக மிரட்டியவர். இப்போது ரவிதேஜா நடிக்கும் கிக் 2 படத்திலும் அவர்தான் வில்லன். புனித் ராஜ்குமாரின் கன்னடப் படத்திலும் நடித்து வருகிறார்.

பொதுவாகவே அஜித் நடிக்கும் படங்களில் வில்லன் வேடங்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். சமீபத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் கூட வில்லன் வேடம் ஏற்றிருந்த அருண் விஜய், அஜித்துக்கு இணையாக பேசப்பட்டார். அந்தவகையில் அஜித் 56 படத்தில் கபிர் சிங்குக்கு முக்கியத்துவம் இருக்கும் என்று நம்பலாம்.