அஞ்சல் அலுவலகம் திறப்பு விழா
தலவாக்கலை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலக புதிய கட்டிடம் 15.06.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அஞ்சல் அமைச்சருமான எம்.எச்.அப்துல் ஹலீம் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இவ் திறப்பு விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அஞ்சல் அதிபர் ரொஹன அபேரத்ன மற்றும் பலரும் கலந்து கொணடனர்.
இக்கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் வழிகாட்டலின் கீழ் அஞ்சல் திணைக்கள நிதி ஒதுக்கீட்டினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.