செய்திகள்

அடிப்படைவசதிகளை செய்து தாருங்கள் என கோரி கற்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா கோவில்குளம் சந்தியில் இரந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை ஊர்வலமாக வந்த சுமார் 200 மேற்பட்டவர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த மக்களை கற்குளம் பிரதேசத்தில் குடியேற்றியபோது சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அரை நிரந்தர வீடுகள் முற்றாக சேதமடைந்த நிலையில் மக்கள் வாழ முடியாத சூழலில் நிரந்தர வீட்டுத்திட்டத்தில்தாம் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் இம் மக்கள் தமக்கான நிரந்தர வீட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுகக் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தீருந்தனர்.

இதேவேளை தமது பிரதேசத்திற்கான வீதிகள் உட்பட பல:வெறு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் இம் மக்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில் தாம் வாழும் கிராமத்தின் பதிவை உறுதிப்படுத்துங்கள், மக்கள் வசிக்க கூடிய வீடுகளை அமைத்து தாருங்கள், எமது கிராமத்திற்கான வீதிகளை புனரமைத்து தாருங்கள் , அபிவிருத்தி திட்டங்களில் எம்மையும் இணைத்து கொள்ளுங்கள் என்ற பதாதைகளையுமு; ஆர்ப்பாட்டத்தில: ஈடுபட்டவாகள் ஏந்தியிருந்ததுடன் கோசங்களையுமு; எழுப்பினர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதனும் கலந்துகொண்டிருந்தார்.

DSC09722