செய்திகள்

அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார் பஷில்

சட்ட விரோ­த­மாக கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள தன்னை விடு­தலை செய்­ய­வேண் டும் எனக் கோரி முன்னாள் பொரு­ளாதார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினைத் நேற்று தாக்கல் செய்­துள்ளார்.

பிர­தமர் ரணில் விக்­ரம சிங்க, அமைச்­ச­ரவை, நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கார, மெகசின் சிறை அத்­தி­யட்சர், சட்ட மா அதிபர் யுவஞ்­சன வண­சுந்­தர உள்­ளிட்ட 45 பேர் இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர்.

உயர் நீதி­மன்ற சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­தன ஊடாக தாக்கல் செய்துள்ள இந்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில், ராஜ­பக் ஷ குடும்­பத்தை பழி­வாங்கும் பட­லத்தின் கீழேயே தான் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­து.அத்துடன் தனக்கும் திவி நெகும நிதி மோசடி விவ­கா­ரங்­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் இல்­லை­யெ­னவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் உடல் நலக் கோளாறு கார­ண­மாக அவ­திப்­படும் தன்னை இவ்வாறு விளக்­க­ம­றி­யலில் வைத்து வதைப்­பது தனது அடிப்­படை உரி­மையை மீறு­வ­தாக அமைந்துள்ளது என பஷில் ராஜபக் ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.