செய்திகள்

அடிப்படை வசதிகளின்றி இயங்கும் பாடசாலை: மலையக அரசியல்வாதிகளின் கவனத்துக்கு (வீடியோ, படங்கள் )

நுவரெலியா கல்விவலயத்திற்கு உட்பட்டகோட்டம் மூன்றுதோன்பீல்ட் தமிழ் வித்தியாலயத்தில் அடிப்படைவசதிகள் இன்மையால் மாணவர்கள் கல்விகற்பதில் பலசிரமங்களைஎதிர்நோக்கிவருகின்றனர்.

இப்பாடசாலையில் 80ற்கும் மேற்ப்பட்டமாணவர்கள் உள்ளதோடு 4 ஆசிரியர்கள் கடமையில் உள்ளனர்.

இக்கட்டிடம் 1914 ம் ஆண்டுகட்டப்பட்டதாகும் தற்போது நூறு வருடங்களைகடந்துள்ளது.பாடசாலையில் நீர் வசதி இல்லை,அத்தோடுமாணவர்கள் விளையாடுவதற்குமைதானம் இல்லை,பாடசாலைக்கெனமின்சாரம் இல்லை,தோட்டநிர்வாகமின்சாரம் வழங்கினாலும் அதுமாணவர்களுக்கு பாதுகாப்பற்றநிலையில் உள்ளதுபாடசாலையின் கூரைதகரம் ஓட்டையாககாணப்படுவதால் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளேவடிகின்றது.பாடசாலையைசுற்றிமரங்கள் காணப்படுவதால் காற்றுவீசும் காலங்களில் வாதுகள் முறிந்துவிழும் அபாயநிலைதோன்றியுள்ளது.

பாடசாலையின் கட்டிடம் வெடிப்புற்று இடிந்துவிழும் நிலையில் காணப்படுகின்றது.அத்தோடுகதவுயன்னல்கள் உடைந்துள்ளது.கட்டிடம் சிறிதாக இருப்பதால் மாணவர்கள் இடையூர் இல்லாமல் அமர்ந்துபடிப்பதுக்குஇடவசதி இல்லாமல் தடுமாறுகின்றனர்.

ஏனைய பாடசாலைமாணவர்கள் புதியதொழில்நுட்பத்தோடுகல்விகற்றாலும் இப்பாடசாலைமாணவர்கள் அடிப்படைவசதிகள் இல்லாமல் கற்பதுவேதனைகுறியவிடயSchool (1) School (2) School (4) School (5) School (6) School (7)மாகும்.

இப்பாடசாலைஆசிரியர்களும் பெற்றோர்களும் புதியகட்டிடம் நிர்மானிப்பதுக்குமலையகஅரசியல் வாதிகளிடம் பலமுறைகோரிக்கைவிடுத்தபோதிலும் இதுவரைஎவரும் நடவடிக்கைஎடுக்கவில்லையெனஅவர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்குதரம் 1 முதல் 5 வரையானவகுப்புகள் நடைபெறுகின்றமைகுறிப்பிடதக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=CfnVkO6kvMs&feature=youtu.be” width=”500″ height=”300″]