செய்திகள்

அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றோம்: அடப்பங்குளம் மக்கள் ஊர்வலம்

வவுனியா அடப்பங்குளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரி இன்று ஊர்வலமொன்றினை நடத்தியிருந்தனர்.

செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமது கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் தமது பிரதேசத்தில் பொது கட்டிடத்தில் உள்ள இராணுவம் வெளியேற வேண்டும், சமுர்த்தி முத்திரை வழங்கலில் பாரபட்சம் உள்ளதாகவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேரியகுளத்தில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் அடப்பங்குளம் வரை சென்று அங்கு கிராம அபிவிருத்தி சங்தக்தின் தலைவரிடம் மகஜரை கையளித்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவத்த பொது மக்கள் தமது கிராம பொது கட்டிடத்தை மீட்டுத்தாருங்கள், ஆலய வீதியை புனரமைப்பு செய்து தாருங்கள் உட்பட பல கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையுமு; தாங்கியிருந்தனர்.

சுமார் இரு மணி நேரமாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்திருந்தது.

Vavuniya (2) Vavuniya (3)