செய்திகள்

அடுத்து வரும் நாட்கள் இலங்கைக்கு தீர்மானம் மிக்கது! எச்சரிக்கும் GMOA

கடந்த சில நாட்களில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரொனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அடுத்த வரும் நாட்கள் இலங்கைக்கு தீர்மானம் மிக்க நாட்கள் இருக்குமென அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமையில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது வரையில் இலங்கையில் 151 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. -(3)