செய்திகள்

”அடுத்து வரும் 6 மாதங்களும் மிகவும் கடினமானவை”: ஜனாதிபதி ரணில்

இலங்கைக்கு அடுத்துவரும் 6 மாதங்கள் மிகவும் கடினமான காலப்பகுதியாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பொருளாதர நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் எனினும் அடுத்து வரும் 6 மாதங்கள் கடினமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை கடந்தே ஆகவேண்டியுள்ளது. அதனை கடக்க முடியாது என்று திரும்பி வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியதத்துடன் தேவையான ஒப்பந்தங்களை செய்து இணக்கப்பாடுகளை எட்டி பயணிப்பதை தவிர மாற்று வழிகள் இருப்பதாக தான் கருதவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

-(3)