செய்திகள்

அடுத்த ஆண்டு ஜனவரியில் இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல்

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சபையின் முன்னாள் உறுப்பினர்களின் ஒரு கோரிக்கைக்கு அமைய நேற்று மாலை விளையாட்டு துறை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அமைச்சர் நவீன் திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு உபாலி தர்மதாச, நிஷாந்த ரணதுங்க, மோகன் டி சில்வா, அசங்க செனவிரத்ன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாட்டில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாக கிரிக்கெட் சபையின் உறுப்பினர்கள் முன்னாள் உறுதியளித்ததாகவும் இன்றைய கூட்டம் மிகவும் சுமூகமான முறையில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.