செய்திகள்

அடுத்த இரு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு : ஹர்ஷ டி சில்வா

அடுத்த இரண்டு வாரங்­களில் பொதுத்­தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யாகும். எந்த நேரத்­திலும் தேர்­தலை எதிர்­கொள்­ளத்­த­யா­ரா­க­வுள்ளோம் என அர­சாங்கம் அறி­வித்துள்ளது. பந்­துல குண­வர்த்­த­னவின் சவாலை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் நாட்டின் உண்­மை­யான பொரு­ளா­தார நிலை­மையை மக்கள் தெரிந்துகொள்ள வேண்­டி­யது கட்­டா­ய­மாகும் என்றும் அரசு தெரி­வித்­தது.

கொழும்பு கிரு­லப்­ப­னை­யி­லுள்ள அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்­சர்கள் கலா­நிதி ஹர்ஷ டி சில்வா இவ்­வ­றி­விப்பை விடுத்தார். பிர­தி­ய­மைச்சர் இங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

அடுத்த இரண்டு வாரங்­க­ளுக்குள் பொதுத்­தேர்­த­லுக்­கான அறி­விப்பு வெளி­யி­டப்­படும். அதன் பின்னர் நாட்டில் ஸ்திர­மான ஆட்சி உரு­வாகும். அதன்­போது நாட்டின் அபி­வி­ருத்­திக்­காக குறைந்த வட்­டியில் எமக்கு கடன்­களை பெற முடி­வ­தோடு மட்­டு­மல்­லாது சர்­வ­தே­சத்தின் முழு­மை­யான ஆத­ரவும் எமக்கு கிடைக்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் நாம் பொதுத்­தேர்­த­லுக்குத் தயா­ரா­கவே உள்ளோம். எப்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­டாலும் பொதுத்­தேர்­த­லுக்கு முகம்கொடுக்க நாம் தயார்.

அர­சியல் ரீதி­யாக அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்டு வரு­வதை விட நாட்டின் நலன் கருதி நிறை­வேற்­றப்­பட்ட 19ஆவது திருத்­தத்­தி­லுள்ள அர­சி­ய­ல­மைப்பு சபையை அமைத்து அதனை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.

அதற்­க­மை­யவே கட்­சித்­த­லை­வர்­க ­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு சபா­நா­ய­க­ரினால் எதிர்­வரும் 3ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தை கூட்­டு­வ­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. பந்­துல குண­வர்த்­தன எம்.பி. என் நல்ல நண்பர். சிறந்த கல்­விமான். அவ­ருடன் தற்­போ­தைய நாட்டின் பொரு­ளா­தார நிலைமை தொடர்­பான விவாதம் நடத்த எப்­போதும் தயா­ரா­கவே இருக்­கிறேன்.

சேறு பூசாத அநா­வ­சிய பேச்­சுக்கள் அற்ற நாட்டின் உண்­மை­யான பொரு­ளா­தா­ரத்தின் நிலை­மைகள் தொடர்­பாக பகி­ரங்­க­மான விவா­தத்­திற்கு நான் தயார். அதற்கு அவ­ருக்­கான கால அவ­கா­சத்­தையும் எனக்­குள்ள கால அவ­கா­சத்­தையும் கருத்தில் கொண்டு திக­தியை நிர்­ண­யிக்­கலாம்.

இதுபோன்ற விவா­தங்கள் நாட்­டுக்கு அவ­சி­ய­மாகும். மக்­களை நாட்டின் உண்­மை­யான பொரு­ளா­தார நிலை­மை­களை தெரிந்துகொள்ள வேண்டும். அது மக்­களின் கடப்­பா­டாகும். அதே­வேளை முன்பு பெற்­றோர்கள் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களுக்கு தான் பிள்ளைகளும் வாக்களிப்பார்கள்.

இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. மக்கள் சிந்தித்து வாக்களிக்கும் நிலைமை உருவாகியுள்ளது என்றும் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.