செய்திகள்

அடுத்த கட்ட நகர்வு என்ன? ஆதரவாளர்களுடன் சோமாவன்ச இரகசிய ஆலோசனை

ஜே.வி.பி.யிலிருந்து வெளியேறியுள்ள அதன் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது அரசியல் எதிர்காலம் குpறத்து இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி கட்சியின் சில தலைவர்கள் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சோமவன்ச அமரசிங்க,  பத்தரமுல்ல சீலரட்ன தேரரின் ஜனசெத்த பெரமுன கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும் இந்தத் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் பரத்தரமுல்ல சீலரட்ன தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், கட்சி அமைப்பது குறித்து பேசவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக ஜே.வி.பி.யிலிருந்து விலகுவதற்கு தாம் எடுத்த தீர்மானத்தை சீலரட்ன தேரர் வரவேற்றிருந்ததாகவும் அதற்காக நன்றி பாராட்டுவதற்காக அந்த அலுவலகத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.