செய்திகள்

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மைத்திரி தலைமையில் எதிரணித் தலைவர்கள் அவசர சந்திப்பு

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தமது அடுத்த கட்டச் செயற்பாடு தொடர்பாக ஆராய்வதற்காக எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்க்கட்சிகளின் அவசர கூட்டம் ஒன்று நாளை வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு கொழும்பில் நடைபெறவிருக்கின்றது.

எதிரணித் தலைவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். தேர்தல் முடிவுகள் தொடர்பில் அடுத்ததாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.