செய்திகள்

அடுத்த தலைவர் ஸ்மித் என்பதில் எந்தசந்தேகமுமில்லை

ஆஸ்திரேலியாவின் அடுத்த ஒருநாள் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என ஆஸி அணியின் மற்றொரு வீரர் சேன்வாட்சன் தெரிவித்துள்ளார்.

வாட்சன் மேலும் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவின் அடுத்த முழுநேரஅணித் தலைவர் ஸ்மித்தான். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். கிரிக்கெட்டை பற்றி தெரிந்துகொண்டு அதை சிறப்பாக செயல்படுத்துகிறார். மேலும் அணியில் சூழ்நிலை குறித்தும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். ஆகவே ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பப்படும்போது எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் ஸ்மித் தான் என்று எனது மனம் சொல்லும்.

இளம் வீரராக இருக்கும் அவர் ஏராளமான அனுபவங்கள் பெற்றுள்ளார். ஏற்கனவே நியூ சவுத் வேல்ஸ் அணியின் தலைவராக இருக்கும் அவர் ஆஸ்திரேலியா, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராகவும் சிறப்பாக செயல்படுகிறார் என வட்சன் தெரிவித்துள்ளார்.
அடுத்த தலைவர் ஸ்மித் என்பதில் எந்தசந்தேகமுமில்லை