செய்திகள்

அடுத்த தேர்தல் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலா?

20வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்தாது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலையே நடத்த வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடையவிருந்த நிலையில் அதன் காலம் மேலும் ஒன்றரை மாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு நீடிக்கப்பட்ட பதவிக்காலம் இம்மாத நடுப்பகுதியுடன் முடிவடையுவுள்ள நிலையிலேயே இந்த யோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த 2ம் திகதி பேருவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன சகல உள்ளுராட்சி சபைகளும் வரும் 15ம்திகதி கலைக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் உள்ளுராட்சி சபைகளின்பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்குமாறு அரசாங்கத்தில் சிலர் ஜனாதிபதியிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.