செய்திகள்

அடுத்த பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக அமைக்க திட்டம்: நீதி அமைச்சர் –

அடுத்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமையும் பாராளுமன்றம் அரசியிலமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்படுமென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
19வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படும் அந்த தேர்தலினூடாக அமையும் பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்ற எமது கட்சி திட்டமிட்டுள்ளது. அதனை தொடர்ந்து புதிய அரசியலமைப்பொன்று தயாரிக்கப்படும். இதற்கு இரண்டு வருட காலமாவது செல்லும். இதற்காக இம்முறை தேர்தலில் மக்களின் அங்கிகாரத்தை எமது கட்சி கேட்டு நிற்கும். என அவர் தெரிவித்துள்ளார்.