செய்திகள்

அடுத்த பொலிஸ்மா அதிபர் யார்? மூவரின் பெயர் பரிந்துரை

புதிய பொலிஸ்மா அதிபரைத் தெரிவு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்க அரசியலமைப்புச் சபை எதிர்வரும் 18ம் திகதி கூடவுள்ளது.

இலங்கையின் 33வது பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்யப்பட்ட என்.கே.இளங்கக்கோன் நளையுடன் ஓய்வு பெறுகிறார்.

இதேவேளை, இதனால் ஏற்படும் வெற்றிடத்திற்கு மூவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான பூஜித்த ஜெயசுந்தர, எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகியோரின் பெயர்களே இவ்வாறு அரசியலமைப்பு சபையிடம் முன்மொழியப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் 18ம் திகதி இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க அரசியலமைப்புச் சபை கூடவுள்ளதாக விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

n10