செய்திகள்

அடுத்த யுத்தத்துக்கு தயாராவதுபோல தயாராகுங்கள்

அடுத்த யுத்தத்துக்கு தயாராவதுபோல  எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகுங்கள். நாட்டுக்கு கல்வி,உயர் தொழிநுட்பம், வேலைவாய்ப்பு போன்றவற்றை ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே முடியும்.

இந்த தேவைகளை பூர்த்திசெய்ய ஐக்கியதேசிய கட்சிக்கு வாக்களிக்க தயாராகுங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற கட்சியின் இளைஞர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதும் குறுகியகால தேவைகளை நூறு நாள் செயல்திட்டத்தின் ஊடாக பூர்த்திசெய்துள்ளோம்.

இனி நீண்டகால தேவையான இளைஞர்களினுடைய வேலை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.