செய்திகள்

அடுத்த 48 மணித்தியாலங்கள் மிகமுக்கியமானவை,

தேர்தல் வன்முறைகள் காரணமாக மக்கள் வாக்களிக்கச் செல்லுவதற்கு தயங்கும் நிலை உருவாகலாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணித்தியாலங்கள் மிகமுக்கியமானவை, அப்பாவிபொதுமக்கள் தாங்கள் தாக்கப்படலாம் என அச்சமடைந்தால் வாக்குசாவடிக்கு செல்ல மாட்டார்கள்,என கபேயின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டமீறல்களுக்கு எதிராக உடனடியாக பொலிஸார் நடவடிக்கைகளை எடுக்காததையே பிரச்சார காலத்தில் காணமுடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரச தரப்பினர் தேர்தல்விதிமுறைகளை மீறும்போது பொலிஸார் இவ்வாறான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் தாமதமாகவே நடவடிக்கை எடுத்துள்ளனர்,உடனடியான நடவடிக்கைகளே இவ்வாறான வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு அவசியமானவை என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.