செய்திகள்

அடைக்கலம் நாடி மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு

அண்டை நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவத்துக்கு எதிராக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

இவ்வாறு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர். இரு நாட்டு எல்லையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லங்காவ் கிராமத்தில் சாதாரண உடையில் அவர்கள் சிக்கினர்.

அவர்களிடம் விசாரித்தபோது, மியான்மர் ராணுவம் இட்ட கட்டளைகளை தாங்கள் நிறைவேற்றாததால், தங்களை ராணுவம் தேடுவதாகவும், எனவே இந்தியாவிடம் அடைக்கலம் பெறுவதற்காக எல்லை தாண்டி வந்ததாகவும் தெரிவித்தனர்.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ராணுவத்துக்கு பயந்து மியான்மர் போலீசார் இந்தியாவுக்குள் ஊடுருவிய விவகாரம் மிசோரமில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மியான்மரில் இருந்து இந்திய மாநிலமான மிசோரமில் எல்லை தாண்டி வந்த 3 போலீசாரை அந்த மாநில போலீசார் நேற்று பிடித்தனர்.(15)