செய்திகள்

அட்சய திதி: மட்டக்களப்பில் நகைக்கடைகள் விழாக்கோலம்

தமிழர்களின் பண்பாடுகளில் அட்சய திதியை மிக முக்கிய இடம்வகிக்கின்றது.இன்றைய நாளில் நகை வாங்கி அணிவதால் என்றும் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாகவுள்ளது.

அக்ஸய திதியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள நகை விற்பனை நிலையங்கள் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் இன்று காலை முதல் பெருமளவான மக்கள் நகை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாகவுள்ளது.

மட்டக்களப்பின் பிரபல நகை விற்பனை நிலையமான சொர்ணம் நகை மாளிகையில் இன்று அக்ஸய திதியை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

சொர்ணம் குழுமத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் இன்று காலை நடைபெற்றதுடன் நகை கொள்வனவு செய்தவர்களுக்க விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதேபோன்று நகரில் உள்ள அனைத்து நகை விற்பனை நிலையங்களிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

1 (2) 1 (3) 1 (4) 1 (5) 1 (6)