செய்திகள்

அட்டகத்தி தினேஷின் புதிய படம் வெகுவிரைவில்!

அட்டகத்தி தினேஷ் நடித்து இறுதியாக வெளிவந்த திருடன் போலீஸ் மற்றும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ போன்றன வெற்றி பெற்றிருந்தது. ஆயினும் அதன்பின்னர் அவர் நடித்த ‘வாராயோவெண்ணிலவே’ படம் வெளிவரும் என்று சொல்லப்பட்டாலும் அது இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அவர் நடிக்கவிருக்கும் புதிய படங்கள் பற்றி எவ்வித அறிவிப்பும் வரவில்லையென்றாலும் அவர் சில கதைகளைக் கேட்டு அவற்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அதுபற்றிய விவரங்களைச் சம்பந்தப்பட்ட படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்றும் தினேஷ் தரப்பினர் சொல்கிறார்கள். அவற்றில் கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை இயக்கிய தனபால் இயக்கும் படமும் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் தனபால் தான் எழுதிய கதைக்குப் பொருத்தமாக தினேஷ் இருப்பார் என்பதால் அவரை அணுகிக் கதை சொல்லியிருக்கிறார். தினேஷூக்கும் கதை பிடித்துவிட்டதால் நடிக்கச் சம்மதம் தெருவித்திருக்கிறார். இருவரும் இணையும் இப் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படம் பற்றிய அறிவிப்பு வெகுவிரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.