செய்திகள்

அட்டனில் குளவி தாக்குதல்

அட்டன் – எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 02 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இழக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் 09.04.2016 அன்று காலை 09.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 02 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் வீடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

N5