செய்திகள்

அட்டனில் தேசிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

தேசிய சித்திரை புத்தாண்டு கொண்டாங்கள் மலையகத்தின் கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிலும் அட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்திலும் வெகு விமர்சியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் 14.04.2016 அன்று தலைமையில் கொண்டாப்பட்டது.

கல்வி இராஜாங்க  அமைச்சு, நேத்திரா தொலைகாட்சி, அட்டன்  டிக்கோயா நகர சபை, அட்டன் பொலிஸ், அட்டன் கல்வி வலைய பனிமனை, அம்பகமுவ பிரதேச செயலகம், அம்பகமுவ பிரதேச சபை, நுவரெலியா பிரதேச சபை,  அட்டன் நகர வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், முத்தையா ராமசாமி, சோ.ஸ்ரீதரன், சிங்பொன்னையா, மலையக மக்கள் முன்னனியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் முன்னால் அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் அழகமுத்து நந்தகுமார் உட்பட பெரும் திறலான பொது மக்களும் கலந்துக் கொண்டனர்

14.04.2016 அன்று காலை 7.00 மனிக்கு கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பூஜைகளும் இடம்பெற்றது. தொடர்ந்து பாரம்பறிய கலை கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றன. போட்டிகளில் சைக்கில் ஓட்டம், மரதன் ஓட்ட போட்டி கொட்டகலை நகரத்தில் ஆரம்பமாகி அட்டன் நகரில் நிறைவடைந்தது. அத்தோடு அட்டன் டன்பார் மைதானத்தில் போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றது.

DSC07822 DSC07827 DSC07856 DSC07890 DSC07899 IMG_0001 IMG_0002 MM (10) MM (19)