செய்திகள்

அட்டன் நகரத்தில் உள்ள கடைகளை பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் தீடிரென சுற்றிவளைத்தனர்.

அட்டன் நகரத்தில் உணவகங்கள், விடுதிகள், பேக்கரி மற்றும் புட் சிட்டி சில்லறை மற்றும் தொகை வர்த்தக நிலையங்களை பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் தீடிரென சுற்றிவளைத்தனர்.

இன்று பொது சுகாதார கண்காணிப்பாளர்கள் அட்டன் நகரத்தில் உள்ள வியாபார ஸ்தலங்களை சோதனைக்குட்படுத்தும் போது பதிவு செய்யப்படாத தண்ணீர், போத்தல்கள், காலவதியான குளிர்பான போத்தல்கள், பழுதடைந்த மரக்கறி வகைகள் பல உணவு பண்டங்கள் மற்றும் பாவனைக்குதவாத தேயிலை தூள் என கைப்பற்றினர்.

இதன்போது பாவனைக்குதவாத மற்றும் அசுத்தமான முறையில் காணப்பட்ட சில்லறை மற்றும் தொகை வர்த்தக நிலையங்களுக்கும், உணவகங்கள், விடுதிகள், பேக்கரி போன்றவைக்கு எதிராக அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்ததோடு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

DSC00219 DSC00221 DSC00431 DSC00437