செய்திகள்

அட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத் திருவிழாவில் பறவைக் காவடிகள் (படங்கள்)

அட்டன் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான திருவிழாவில் 30.04.2015 இன்று வியாழக்கிழமை சிங்கமலையடிவாரத்திலிருந்து புனித கங்கை நீர், டிக்கோயா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து காவடி, பறவைக்காவடிகள் மங்கல வாத்திய இசை முழங்க தேவஸ்தானத்தை வந்தடைந்தது. அத்தோடு வசந்த மண்டப பூஜை, மகேஸ்வர பூஜையும் இடம்பெற்றது.

01.05.2015 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருமூர்த்திகள் தேவஸ்தான உள்வீதி வலம் வந்து பஞ்சரதபவனி செய்து அருள்பாலிப்பார். பஞ்சரதபவனி தேவஸ்தானத்திலிருந்து மல்லியப்பு கடைத்தெரு வழியே பிரின்செஸ் வரை சென்று அவ்வழியே திரும்பி ஹெட்கொப் சந்தியூடாக திரும்பி சைட் வீதி வழியாக எம்ஆர் டவுன் வரை சென்று பிரதான வீதி வழியே தேவஸ்தானத்தை வந்தடையும்.

அதனை தொடர்ந்து 02.05.2015 அன்று பஞ்சரதபவனி தேவஸ்தான அடிவாரத்தை வந்தடைந்ததும் பச்சை சாத்தப்படும். மாலை 6 மணிக்கு தேரடி திருவிழா இடம்பெறும்.

IMG_0690

IMG_0693

IMG_0700

IMG_0705

IMG_0706

IMG_0713

IMG_0717

IMG_0720

IMG_0722

IMG_0723

IMG_0724

IMG_0732

IMG_0746

IMG_0748