செய்திகள்

அட்டன் விபத்து – ஒருவா் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம் – சாரதி கைது

கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியுடன் அட்டனிலிருந்து வட்டவளை ரொசல்ல பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வூட்லேண்ட் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனா்.

இவ்விபத்து இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி சிறுகாயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் சாரதியை கைது செய்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனா்.

இவ்வாறு உயிரிழந்தவா் ரொசல்ல பகுதியை சேர்ந்த 33 வயது நிரம்பிய எம்.சுரேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

DSC09386

DSC09385

DSC09384

DSC09381

DSC09380