செய்திகள்

அணிக்கு திரும்ப தகுதியானவர் ஹர்பஜன்சிங்: கவாஸ்கர்

இந்திய டெஸ்ட் அணியில் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஹர்பஜன்சிங் இடம் பிடித்து இருப்பதற்கு முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

மூத்த வீரர், இயைவீரர் என்று பார்க்காமல் தற்போது சிறப்பான நிலையிலிருக்கும்இருக்கும் வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்பதை ஹர்பஜன்சிங் தேர்வின் மூலம் தேர்வாளர்கள் பறைசாற்றி இருக்கிறார்கள்.

சிறப்பாக செயல்படும் நபருக்கு அணியில் இடம் உண்டு என்று நிரூபித்து இருக்கிறார்கள். இந்திய அணியில் இடம் பிடிக்க ஹர்பஜன்சிங் தகுதியானவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி இருக்கும் ஹர்பஜன்சிங் தனது திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமில்லை. விக்கெட்டுகள் வீழ்த்துவது மட்டுமின்றி ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சும் நல்ல நிலையில் உள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்