செய்திகள்

அணியில் இடம்பிடிக்க இலங்கை பெண்கள் கிரிக்கட் அணியின் உறுப்பினர்கள் பாலியல் இலஞ்சத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டர்

இலங்கை பெண்கள் கிரிக்கட் அணியின் உறுப்பினர்கள் தமது இடத்தை அணியில் தக்கவைத்து கொள்ளும்பொருட்டு பாலியல் இலஞ்சத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போது பாலியல் இலஞ்சத்துக்கு நிர்ப்பந்திக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதகவும் இவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. அணியின் உறுப்பினர் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இது ஒரு வெட்கக்கேடான செயல் என்று சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனநாயக்க தெரிவித்திருக்கிறார்.