செய்திகள்

அண்டை நாடான கமரூனுக்குள் புகுந்து இளம்பெண்களை கடத்திச் சென்றது பொக்கோ ஹராம்

நைஜீரியாவின் பொக்கோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு அண்டை நாடான கமரூனின் சில கிராமங்களுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரெனப் புகுந்து 80 ற்கும் அதிகமான இளம் பெண்களையும் சிறுவர்களையும் கடத்திச் சென்றிருக்கிறது.

அதிகாலை வேளை மக்கள் உறக்கத்தில் இருந்த வேளை உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய பொக்கொ ஹராம் எதிர்ப்புக்காட்டிய 4 பேரை சுட்டுக்கொன்றதுடன் 80 ற்கும் மேற்ப்பட்ட வீடுகளையும் நிர்மூலம் செய்தது.

கடத்திச் செல்லப்பட்டவர்களில் 50 பேர் பத்து முதல் 15 வயது வரையான இளம் பெண்களும் சிறுவர்களும் எனவும் 30 பேர் வயது வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவின் கிராமங்களுக்குள் புகுந்து போக்கோ கராம் நடத்திய தாக்குதலில் 2000 ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் வடக்கு நைஜீரியாவின் கிராமம் ஒன்றினுள் புகுந்து சுமார் 2000 பாடசாலை மாணவிகளை போக்கோ ஹராம் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருந்தமை தெரிந்ததே.