செய்திகள்

அதிகம் பாராட்டப்படாத வெட்டோரி- பிரைடன் கவர்டேல்- கிரிக்கின்போ

செவ்வாய்கிழமை நியுசிலாந்தின் விமானநிலையத்தில் டானியல் வெட்டோரியிடம் நிருபர் ஓருவர் நீங்கள் ஓய்வுபெறப்போவதாக வெளியாகியுள்ள தகவல் உத்தியோகபூர்வமானதா என கேள்வி எழுப்பிய வேளை , அவர் தனது வழமையான பாணியில் ஆம் அது தான் என பதிலளித்தார். கிரிக்கெட் உலகம் தனது சிறந்த நல்லெண்ண தூதுவரை இழந்துள்ளது.

209763
கிரிக்கெட் உலகில், கவனத்தை ஈர்ப்பவர்களுக்கு அல்லது ஈர்க்க முனைபவர்களுக்கு குறைவில்லை.அதில் சிலர் தங்களது சாதனைகள் மூலம் உலகம் தங்களை பற்றி பேசும்படி செய்தவர்கள்.
இந்த விடயத்தில் வெட்டோரியை சிவ்நாரயண் சந்தர்போலுடன் ஓப்பிடலாம்.இருவரினது திறமையும் அதிகம் புகழப்படாததொன்று.
வெட்டோரி தனது வாழ்க்கையில் 18 வருடங்களை நியுசிலாந்தின் கிரிக்கெட்டிற்கு வழங்கியுள்ளார்.ஆனால் அவரது மனதில் அவர் எப்போதும் வெட்டோரிக்கு முக்கியத்துவம் வழங்கி சிந்தித்ததில்லை, அணியே அவரின் மனதில் எப்போதும் இடம்பெற்றிருந்தது.

இந்த உலககிண்ணப்போட்டியில் மேற்கிந்திய அணியின் மார்லன்சாமுவேல்ஸை அற்புதமான கட்ச் ஓன்றின் மூலம் ஆட்டமிழக்கச்செய்த பின்னர் அவர் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை, சற்று வெட்கப்பட்டவர் போல தோன்றினார்.அது தான் டான்( வெட்டோரியின் செல்லப்பெயர்)
அதிகம் அதிர்ந்து பேசாத,மென்மையான சுபாவம் கொண்ட டான் நியுசிலாந்து அணியின் இன்றையநிலைக்கு முக்கியமான காரணம் என தெரிவிக்கலாம்.
2009 மற்றும் 2010 இல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த உணர்வுடன் கிரிக்கெட் விளையாடும் அணிக்கான விருதினை அவர்கள் பெற்ற வேளை அந்த அணியின் தலைவர் டான்.

207969

2012 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட வீரரை தான் தவறுதலாக மோதியதால் அவர் ரன்அவுட் ஆகும் நிலை ஏற்பட்டபோது அப்பீல் செய்யாமல் விட்டு தன்னை வெளிப்படுத்தியவர் வெட்டோரி அதற்காகவும் அவருக்கு ஐ.சிசி விருதுவழங்கியது(ளிசைவை ழக உசiஉமநவ)
அந்த சமயத்தில் செய்ய கூடிய சரியான செயல் அதுவே,நாங்கள் ஓரு அணி என்ற வகையில் கிரிக்கெட்டின் சிறந்த உணர்வுடன் விளையாட முயல்கிறோம் என அந்த விருதை பெற்றுக்கொண்ட வேளை அவர் தெரிவித்தார்.
கிரிக்கெட்டை அதன் சிறந்த உணர்வுடன் விளையாடுவது என்றால் என்னவென்று வர்ணிக்க முடியாது,ஆனால் நாங்கள் மைதானத்திற்குள் எப்போதும் சிறந்த மனத்துடன்,சிறந்த உணர்வுடன் கிரிக்கெட் விளையாட செல்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் வெட்டோரியும் கிரிக்கெட் உலகத்தை ஆச்சரியப்படுத்தினார். 2011 உலககிண்ண காலிறுதியில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா அணியினருடன் தர்க்கம் செய்ததற்காக ஐ.சிசி அவருக்கு அபராதம் விதித்தது.
கிரிக்கெட் உ லகில் 4000 ஓட்டங்களையும் 300 விக்கெட்களையும் பெற்ற சிலரில் வெட்டோரியும் ஒருவர் என்பது அவரது திறமைக்கு சான்றாகும்.
சேர் ரிச்சட் ஹாட்லி நியுசிலாந்தின் சிறந்த வேகப்பற்து வீச்சாளர் என்றால், அவர்களின் சிறந்த சுழந்பந்துவீச்சாளர் வெட்டோரி.
1997 இல் தனது18 வயதில் அணிக்கு தெரிவிக்கப்பட்ட வேளை மருந்தாளர் ஆகவேண்டும் என்பதே வெட்டோரியின் கனவாக காணப்பட்டது.ஆனால் அவர் பின்னர் 18 வருடங்களில் பல துடுப்பாட்ட வீரர்களுக்கு பலவிதமான மருந்துகளை வழங்கினார்.
தனது சுழற்பந்துவீச்சில் அவர் பயன்படுத்திய வித்தியாசங்களும்,அவரின் பந்துகளில் காணப்பட்ட துல்லியமும் 305 ஓருநாள் விக்கட்களையும், 362 டெஸ்ட் விக்கெட்களையும் அவர் வீழ்த்துவதற்கு காரணம்.
2011 இல் நியுசிலாந்து அணி 18 வருடங்களுக்கு பின்னர் ஆஸி அணியை டெஸ்ட் போட்டியில் தோற்கடித்தபோது காயம் காரணமாக வெட்டோரி அந்த போட்டியில் விளையாடவில்லை.
அவர் விளையாடிய 112 டெஸ்ட்களில் 34 இல் மாத்திரமே அவரது அணி வெற்றிபெற்றது.எனினும் அவரது இறுதி டெஸ்டில் பாக்கிஸ்தானிற்கு எதிராக நியுசிலாந்து அணி வெற்றிபெற்றது.
கடந்த நவம்பரில் இடம்பெற்ற அந்த போட்டியில் அவர் விளையாடியதே அவரது மன உறுதியை வெளிப்படுத்தியது.பலர் அவர் ஏற்கனவே டெஸ்ட்போட்டியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார் என்றே கருதினர்.முதுகுவலி போன்றவற்றால் அவர் மிகுந்த சிரமப்பட்டார்.
எனினும் தனது ஐந்தாவது உலககிண்ணத்தில் விiளாயடவேண்டும் என்ற ஆசை அவருக்கு அனைத்தையும் விட அதிகமாக காணப்பட்டது.அவர் மிகக் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு அணியில் இடம்பிடித்தார்.

209719

இந்த உலககிண்ணத்தில் அதிக விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளரானார்.
கடந்த இரு தசாப்தகாலமாக நியுசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் வெட்டோரி இருக்கின்றார், அவரிற்கு உரிய மரியாதை வழங்கவேண்டும், அவரின் பந்துகளை அவதானமாக விiளாடவேண்டும் என்பது எதிரணிக்கு தெரிந்திருந்தது.
வெட்டோரி தனது வாழ்க்கையின் 18 வருடங்களை மைதானத்தில் செலவிட்டுள்ளார்.அது நிச்சயமாக அவரது உடலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்,உலக கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் அவர் காயத்தால் பாதிக்கப்பட்டது ஆச்சரியமளிக்கவில்லை.
கிரிக்கெட் உலகத்தினால் பராட்டப்ட்ட,நேசிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் மிகச்சிலரே-வெட்டோரி அவர்களில் ஒருவர்