செய்திகள்

அதிகரிக்கும் வன்முறைகள் குறித்து ஐ.நா. கவலை: அமைதியாக தேர்தல் நடத்தப் வேண்டும் என வலியுறுத்து

ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் கவலை வெளியிட்டுள்ளார். தேர்தல் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

நியுயோர்க்கில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இலங்கையில் அண்மையில் நடந்து வருகின்ற, இன்றும் கூட நடந்துள்ள சம்பவங்கள் குறித்து ஐ.நா அறிந்து வைத்துள்ளது. நல்லிணக்கம், மற்றும் அரசியல் பேச்சுக் குறித்து, ஐ.நா பொதுச்செயலர் அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் அமைதியான முறையிலும், சிறுபான்மையினர் வாக்களிக்கத்தக்க வகையிலும் இடம்பெற வேண்டும் என்றும் அவர் சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.