செய்திகள்

அதிகரித்துள்ள பாடசாலை மாணவர்களின் புகைப்பழக்கம்!

உலக சுகாதார ஆய்வறிக்கை, இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

பாடசாலை மாணவ மாணவிகளில் ஆயிரம் பேரில் ஒருவர் புகையிலை பாவனைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம், 16 சதவீதமான மாணவர்களும் 5 சதவீதமான மாணவிகளும் புகையிலை பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

புகைத்தல் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் 80 சதவீதமான மாணவர்கள் அறிந்திருக்கின்ற போதிலும் அவர்கள் அது தொடர்பில் கவனத்திற்கொள்வதில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.