செய்திகள்

அதிகாரங்களை முழுமையாக பிரதமருக்கு மாற்ற ரணில் முற்படுகின்றார்: சம்பிக்க குற்றச்சாட்டு

நாம் முன்­வைத்த 19ஆவது அர­சியல் அமைப்பு திருத்­தத்­திற்கு முற்­றிலும் முர­ணான வகையிலும் 19ஆவது திருத்­தத்­தினை மாற்­றி­ய­மைக்கவும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க திட்டம் தீட்­டு­கின்றார். ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களை முழு­மை­யாக பிர­தமர் வசம் மாற்­றி­ய­மைக்­கவே ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிப்­ப­தாகவும் ஜாதிக ஹெல உரு­மய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க குற்றஞ்சாடட்டியிருக்கின்றார்.

19 ஆவது திருத்தம் தொடர்பில் தேசிய நிறை­வேற்று சபையின் மீண்டும் விவாத்­திற்கு உட்­ப­டுத்தி விட்ட தவ­று­களை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார். தேசிய அர­சாங்­கத்­தினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் திடீ­ரென முரண்­பா­டுகள் ஏற்­பட்டு வரு­கின்ற நிலையில் இதனை ஹெல உறு­மய எதிர்ப்­பது ஏன் என வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­னது.

“19ஆவது திருத்­தத்­தினை செயற்­ப­டுத்த வேண்டும். ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்ற சர்­வா­தி­கார தன்­மை­யினை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்­ற­தனை வலி­யு­றுத்­தியே ஜாதிக ஹெல உறு­மய 19 ஆவது திருத்தச் சட்­டத்­தினை கொண்டு வந்­தது. அப்­போது நாட்டின் நிலை­மை­க­ளுக்கு அமைய ஜனா­தி­ப­திக்­கான சர்­வா­தி­கார போக்­கினை கட்­டுப்­ப­டுத்­தி­யாக வேண்டும் என்ற பிர­தான விட­யத்­தினை கருத்திற் கொண்டே தாம் இதனை முன்­வைத்தோம். ஆனால் எந்­த­வொரு இடத்­திலும் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை முழு­மை­யாக நீக்­கு­மாறு இதில் சுட்டிக் காட்­டப்­ப­ட­வில்லை.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பில் கட்சி தலை­வர்கள் கூட்டம் இடம்­பெற்று அதில் விவா­திக்­கப்­பட்­ட­துடன் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் விவா­தத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் 19 ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்பில் வாத பிர­தி­வா­தத்­திற்கு பின்னர் இணக்­கப்­பாட்­டிற்கு வந்தோம். பின்னர் வர்த்­த­மாணி அறி­வித்­தலில் வெளி­யிட தீர்­மா­னிக்­கப்­பட்­ட­போதும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்க இதனை அவ­சரப் பிரே­ர­ணை­யாக முன்­வைக்க தீர்­மா­னித்தார்.

அதே போல் இணக்­கப்­பாட்­டிற்கு எட்­டப்­பட்ட 19ஆவது திருத்தச் சட்டம் அல்ல, பிர­தமர் ரணி­லினால் முன்­வைக்­கப்­ப­ட­வி­ருந்த 19ஆவது திருத்தம் இதில் பல மாற்­றங்கள் செய்­யப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களை குறைப்­ப­து­பற்றி நாம் பேசிய போதும் ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களை முழு­மை­யாக நீக்கி பிர­த­ம­ருக்­கான அதி­கா­ரங்­களை பல­மிக்­க­தாக கூட்­டிக்­கொள்ளும் சதித்­திட்­டமே இதன் பின்­ன­ணியில் உள்­ளது. 19ஆவது திருத்தச் சட்­டத்தில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சூழ்ச்­சி­யி­னையே மேற்­கொள்­கின்றார். இதற்கு நாம் எமது எதிர்ப்­பி­னையே வெளிப்படுத்துவோம்.

19 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கட்சித் தலைவர்கள் மாநாட்டில் விவாதத்திற்கு கொண்டுவரப்படவேண்டும். தேசிய நிறைவேற்று சபையில் மீண்டும் இது தொடர்பில் கலந்தாலோசித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.