செய்திகள்

அதிகாரப்பகிர்வு தொடர்பில் மோடியுடன் பேசுவோம்: சுமந்திரன் சொல்கிறார்

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 13 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இதன்போது, இந்தியப் பிரதமரைச் சந்தித்து, அதிகாரப்பகிர்வு குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்கும், 13வது திருத்தச்சட்டம் குறித்த கரிசனைகள் குறித்து தாம் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் செல்லும் மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அங்கு சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார்.