செய்திகள்

அதிக பணம் அறவிடும் பஸ்கள்; முறைப்பாடு செய்ய தொலைபேசி இலக்கம்

சாதாரண கட்டணத்தைவிட அதிகமாக பணம் அறவிடும் பஸ்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை 3 மாதங்களுக்கு தற்காலிகமாக இரத்து செய்தவற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதிக கட்டணம் அறவிடும் பஸ்கள் தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு அறியப்படுத்த முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி ஹேமஷந்திர குறிப்பிட்டுள்ளார்.

உரிய ஆதாரங்களுடன் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் சம்பந்தப்பட்ட பஸ்களின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் 3 மாதங்களுக்கு இரத்து செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக தற்போது விசேட சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்களில் இறுதி தரிப்பிடம் வரையான கட்டணங்களே இடையில் இறங்கும் பயணிகளிடமும் அறிவிடப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து அறியப்படுத்தும் போது சம்பந்தப்பட்ட பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

n10