செய்திகள்

அதிசொகுசு பஸ் மீதும் உரிமையாளர் மீதும் தாக்குதல்

மஹரகமயிலிருந்து மாத்தறை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அதிசொகுசு பஸ் ஒன்றின் மீது மஹரகம பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை, அந்த பஸ்ஸின் உரிமையாளர் மீது நாரஹேன்பிட்டி போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு முன்னால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் மீதான தாக்குதல் காரணமாக அதன் உரிமையாளருக்கு 7 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையூடான பஸ் போக்குவரத்து தொடர்பில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையே இந்த தாக்குதல்களுக்கு காரணமாகியுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் கூறினர்.