செய்திகள்

அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: மதுரையில் பரபரப்பு

மதுரையில் அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியின் 51வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தவர் விஜயராகவன். இவர் நேற்று முனிச்சாலை பகுதியில் வந்துக்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த 10க்கும் மேற்பட்ட அடையாள தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த விஜயராகவனை அப்பகுதியில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்ட விஜயராகவன் அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சம்பவ இடத்தை பார்வையிட்ட மதுரை மாநகர காவல்துறை ஆணையர் இது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலை அல்ல எனவும் குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மதுரையில் தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

N5