செய்திகள்

அதிமுக – திமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதும் தொகுதிகள்

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – திமுக வேட்பாளர்கள் 169 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றனர்.

● திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் மு.கருணாநிதியை எதிர்த்து அதிமுக சார்பாக ஏ.என்.ஆர் பன்னீர் செல்வம் களம் காண்கிறார்.

● கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினும் அவரை எதிர்த்து ஜே.சி.டி பிரபாகரனும் போட்டியிடுகின்றனர்.

● துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர் பாபுவுக்கு எதிராக, அதிமுக சார்பாக கே.எஸ்.சீனிவாசனும் போட்டியிடுகிறார்.

● சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ. அன்பழகனை எதிர்த்து,  அதிமுக சார்பாக நூர்ஜஹானும் போட்டியிடுகின்றார்.

● சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியனும் அவரை எதிர்த்து அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் பொன்னையனும் போட்டியிடுகின்றனர்.

● திருச்சி மேற்கு தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவும் அவரை எதிர்த்து அதிமுக சார்பாக மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

● திருக்கோவிலூர் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியும் அவரை எதிர்த்து ஜி.கோதண்டராமனும் போட்டியிடுகின்றனர்.

● திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதியை எதிர்த்து அதிமுக சார்பாக பி.கே வைரமுத்து களம் இறங்குகிறார்.

● அருப்புக்கோட்டை தொகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் அவரை எதிர்த்து அதிமுக சார்பாக வைகைச்செல்வனும் போட்டியிடுகின்றனர்.

● திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவுக்கு எதிராக, கே.தினேஷ்பாபு களம் காண்கிறார்.

● திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதா கிருஷ்ணனை எதிர்த்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் போட்டியிடுகின்றார்.

● இதேபோல் வேளச்சேரியில் நடிகர் வாகை சந்திரசேகரும் அவரை எதிர்த்து அதிமுக சார்பாக எம்.சி முனுச்சாமியும் போட்டியிடுகின்றனர்.

N5