செய்திகள்

அதிமுக வேட்பாளர் எம்.சி முனுசாமி மீது ஆக்கிரமிப்பு புகார்

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக, சென்னை வேளச்சேரி அதிமுக வேட்பாளர் எம்.சி முனுசாமி மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் பொன்குமார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் நீலாங்கரைப் பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த ரேடியோ, தொலைக்காட்சி அறையை இடித்து மாநகராட்சி தன்வசப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, சென்னை மாநகராட்சி கணக்கு தணிக்கை குழுத் தலைவரான கே.பி. முனுசாமி, அந்த இடத்தை வாகன நிறுத்தும் இடமாக மாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் பொதுவழிப் பாதையான கபாலீஸ்வரர் சாலையையும் முனுசாமி ஆக்கிரமித்ததாகவும், இது குறித்து பல முறை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொன்குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பொதுபாதை மற்றும் அரசு நிலத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொன்.குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

N5