செய்திகள்

அதிரும் அமெரிக்கா -2 லட்சத்தை தாண்டிய பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை – ஒரே நாளில் 660 பேர் உயிரிழப்பு

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 203 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 27 ஆயிரத்து 986 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 491 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 474 பேர் குணமடைந்து சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 22 ஆயிரத்து 613 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.மேலும், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 660 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 713 ஆக உயர்ந்துள்ளது.(15)