செய்திகள்

அதி நவீன சொகுசு பஸ் பாவனை தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சஷிந்திர ராஜபக்ஸ (படங்கள்)

கடந்த அரசாங்கத்தின் போது பொது நலவாய மாநாட்டு காலப்பகுதியில் அதன் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சுக்கு சொந்தமான அதி நவீன சொகுசு பஸ்ஸினை வேறு நடவடிக்கைக்காக பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ நிதி குற்றவியல் விசாரனை பிரிவினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் 3 மணி நேரம் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சஷிந்திர ராஜபக்ஷவின் குடும்பத்தார் குறித்த பஸ்ஸினை சுற்றுலா பயணமொன்றிற்கு பயன்படுத்தியமைக்கான புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

494332786bus

bus2