செய்திகள்

அதே அரசாங்கம் ஆனால் வேறொரு முகம் என்கிறார் மாயா அருட்பிரகாசம்

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் தழுவியிருப்பதாகவும் ஜனாதிபதி சிறிசேனவின் வெற்றிக்கு அவர்களது வாக்குகள் காரணமாகவும் இருந்ததாக கூறியிருக்கும் பிரபல பாடகியான மாயா அருட்பிரகாசம் (ஏம்.ஐ.ஏ), தற்போது அரசாங்கம் அந்த மக்களினது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யவேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சனல் 4 தொலைக்காட்சி சேவைக்கு நேற்று வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்த அவர், ராஜபக்ஸ ஹேக் நீதிமன்றம் முன்பாக நிறுத்தப்படுவதே தமது விருப்பம் என்றும் ஆனாலும் அதனைவிடவும் யுத்தத்திற்கு பின்னரான இந்தக் காலத்தில் சமாதானமே தமிழ் மக்களுக்கு அவசியமானது என்றும் கூறினார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், கடந்த 30 வருடகாலங்களாக இருந்துவரும் அரசியல்வாதிகளைக்கொண்ட அதே அரசாங்கம் தான் , ஆனால் வேறொரு முகத்தைக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

முழுமையான பேட்டியைக் காண இங்கே அழுத்தவும்