செய்திகள்

அத்தியவசிய பொருட்களை வாங்கும் online முறை சரியாக செயற்படுவதில்லை : மக்கள் குற்றச்சாட்டு

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலத்தில் ஒன் லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்ய முடியுமென கூறப்படுகின்ற போதும் அந்த முறைமை முறையாக செயற்படுவதில்லையென மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் தாங்கள் கொள்வனவு செய்வதற்காக குறிப்பிடும் பொருட்கள் வீட்டுக்கு வருவதில்லையெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பொருட்களை கொள்வனவு செய்யும் போது அவை வீடு வந்து சேர நாட்கள் எடுப்பதாகவும் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று கொள்வனவு செய்வதற்காக சுப்பர் மார்க்கட்டுகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ள போது அந்த தொலைபேசி இலக்கங்களில் பதிலளிக்கப்படுவதில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இந்த விடயம் குறித்து அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். -(3)