செய்திகள்

அத்துரலிய ரத்ன தேரரருக்கான பாதுகாப்பு திடீர் வாபஸ்: அரசுக்கு நிபந்தனை விதித்ததையடுத்து அதிரடி

அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலிய ரத்ண தேரருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிரடியாக வாபஸ்பெறப்பட்டிருக்கின்றது. அரசாங்க உயர் அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்துள்ள ஹெல உறுமய அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாகவும் அறிவித்திருக்கின்றது. அதேவேளையில், அரசுக்கு எதிரான பேரணி ஒன்றையும் ஹெல உறுமய இன்று நடத்துகின்றது. இந்த நிலையிலேயே ரட்ண தேரருக்கான பாதுகாப்பு அதிரடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தேரருக்கு மூன்று பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக தேரரிடம் தெரிவித்த அவர்கள் நேற்றிரவுடன் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனை தேரரும் உறுதிப்படுத்தியுள்ளார்.