செய்திகள்

அந்தாட்டிக்காவில் ஆராய்ச்சி மேற்கொள்ள 4000 விஞ்ஞானிகள் பயணம்

அந்தாட்டிக்காவில் ஆராய்ச்சி நடத்த கோடை காலத்தின் போது சுமார் 4 ஆயிரம் விஞ்ஞானிகள் பயணம் மேற்கொண்டிருப்பதுடன், அவர்களில் ஆயிரம் பேர் மாரி காலத்திலும் அங்கு தங்கியிருக்கவுள்ளனர்.

ப+மியிலுள்ள கண்டங்களில் தரிசுவெளியாகவும் அதிகளவுக்கு தனித்து விடப்பட்டதாகவும் மர்மமானதாகவும் அந்தாட்டிக்கா இருக்கிறது. அந்தாட்டிக்காவின் வடக்கு வளைகுடாவானது ப+மியின் கடந்தகாலம். நிகழ்காலம், எதிர்காலம் யாவுமே ஒருங்கிணைந்ததாக காணப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் கனடாவின் பரிமாணத்தைக் கொண்ட இந்த உறைந்த கண்டத்தில் மனிதரின் அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்கள் மறைந்து கிடப்பதாக கருதப்படுகிறது. நாங்கள் எங்கிருந்து வந்தோம்? இப்பிரபஞ்சத்தில் நாங்கள் மட்டுமே தனியாக உள்ளோமா? வெப்பமைடைந்து வரும் எமது கிரகத்தின் கதி என்ன, என்ற கேள்விகளுக்கான பதில்கள் இங்கு பொதிந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

பிரபஞ்சத்திற்கு வெளியே பார்ப்பதற்கான காரணமாக இது காணப்படுகிறது. உகந்த தருணமாகவும் இது விளங்குகிறது. என்று அமெரிக்க தேசிய விஞ்ஞான மன்றத்தின் துருவப் பகுதி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவர் கெஸ்லி பால்க்னர் கூறியுள்ளார்.

அந்தாட்டிக் கண்டத்தின் கோடை கால நடுப்பகுதி ஜனவரியில் சுமார் 12 நாட்களாகும். வேற்றுக்கிரக வாசிகள் போன்ற பிராணிகள், புராதன கால பனிக் கட்டிகளுக்குள் அகப்பட்டிருக்கும் மாசுகள், பெரு வெடிப்பு, விட்டுச் சென்ற தடங்கள், சிறப்பான மருத்துவ சிகிச்சைகளுக்கு வழி வகுக்கக் கூடிய உயிரியல் பொருட்கள் மற்றும் தொடர்ந்து உருகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் என்பன குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்வேறுபட்ட துறைகளைச் சார்ந்த விஞ்ஞானிகளே அங்கு சென்றுள்ளனர். மலைகள், வெண்ணிறத் தகடுகள் கொண்டதாக அந்தாட்டிக்கா இருக்கின்றதென்ற பிரதிமைகளே பரவலாக வெளிப்பட்டிருப்பதுடன் மிகவும் குளிரான, வரண்ட தொலைதூரத்திலுள்ள கண்டமெனக் கருதப்படுகிறது.

இக்கண்டத்தின் 98 சதவீதமான பகுதிகள் பனியினால் மூடப்பட்டுள்ளன. அந்தப் பனியானது தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கிறது. தெற்குப் பகுதியிலிருந்து அந்தாட்டிக்கா குடிவரை ப+ச்சியத்திற்கும் மேலாக வெப்பநிலை காணப்படுவதாகவும் தென்துருவப் பகுதிக்கு சமீபமாக உறைந்திருக்கும் நிலப் பகுதியானது கடும் குளிராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் எரிமலைகக்கும் தீவானது கடுமையான தன்மையுடன் காணப்படுகிறது. 100 சதம பாகை வெப்பத்தில் கடல் கொதிக்கும் இடங்களும் அங்கு உள்ளன. சூரியன் அப+ர்வமாகவே உதிக்கும் அந்தாட்டிக்காவின் மாரிகாலம் இருளானதகாவும் கோடைகாலத்தில் இரவு இல்லாததாகவும் காணப்படும்.

சுற்றுலாப் பயணிகள் அழகை ரசிக்க அங்கு செல்வதுடன், விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கா படையெடுக்கின்றனர். அந்தாட்டிக்காவின் காலநிலை பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆராயவே விஞ்ஞானிகள் அங்கு செல்கின்றனர். மேற்கு அந்தாட்டிக்காவின் பனிப்படலம் தொடர்நது உருக ஆரம்பித்திருப்பதாக நிபுணர்கள் கூறுவது சரியானதாக இருந்தால் மியாமி, நிய+யோர்க், நிய+ ஒர்லீன்ஸ், குவாங்சூ, முப்பை, ஒசாகா போன்ற நகரங்கள் கடல் மட்டம் மேலெழுவதால் ஏற்படும் வெள்ளத்தினால் தொடர்ந்து போராட நேரிடும் என்றும் அதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை ஆராய்வதற்காகவுமே விஞ்ஞானிகள் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அந்தாட்டிக்கா பாரியதாக இருக்கிறது. அதில் ஏற்படும் மாற்றம் கிரகத்தின் ஏனைய பகுதிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் அங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை நாம் அலட்சியப்படுத்த முடியாது என்று பிரிட்டிஷ் அந்தாட்டிக்கின் விஞ்ஞானத்துறைப் பணிப்பாளர் டேவிட் வோகன் கூறியுள்ளார்.

4 ஆயிரம் விஞ்ஞானிகள் கோடை காலத்தில் அங்கு சென்றிருந்த நிலையில் 1000 பேர் மாரி காலத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவுள்ளனர். இவர்களை விட விஞ்ஞானிகளால்லாத ஏனைய ஆயிரம் பேரும் அங்கு சென்றுள்ளனர்.